Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்தில் அரசை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் அடையாள உண்ணாவிரதம்

(திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே & Sathu) அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இலங்கை அரசை கண்டித்து அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் இன்று 2017.01.29ஆம் திகதி…

Image
(திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே & Sathu)

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இலங்கை அரசை கண்டித்து அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் இன்று 2017.01.29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் ஒன்று திருக்கோவில் மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைப்பின் தலைவி த.செல்வராணி தலைமையில் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தமது கணிணீருக்கு ஒரு தீர்வினைப் பெற்று தரும்படி கோரிக்கை விடுத்திருந்ததுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் டி.கலையரசனிடம் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் அவர்களிடம் கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்றினையும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரினால் கையளிக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்  இந்த நாட்டில் இன, மத, பேதம் இல்லாது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் இதைப்போன்ற துயரம் இனிவரும் சந்ததியினருக்கும் வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உயிருடன் இருந்தால் விடுதலை செய்யுங்கள் அல்லது உறவினர்களிடம் காட்டுங்கள்  காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணை செய்யும் காரியாலயம் திறப்பதற்கு இலங்கை அரசு கைச்சாத்திட வேண்டும், ஜ.நா.க்கு முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் உடநடியாக நிறைவேற்று, இந்த அடையாள உண்ணாவிரத்தினை ஏற்று எமக்கு காலம் கடத்தாது விரைவாக தீர்வுகளைப் பெற்றுத் தரவேண்டும் என  கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இவ் அடையாள உண்ணாவிரத்தில் கலந்து கொண்டவர்கள் தமது உறவுகளை காணாமல் செய்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.இந்த அடையாள உண்ணாவிரத்தினை அரசு ஏற்காதுவிடுமிடத்து தாம் தொடர்ந்து சாகும் வரையிலான உண்ணாவிரத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கலந்து கொண்டவர்கள் உருக்கமாக ஜனாதிபதி,பிரதமர்மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்திருந்தனர்.













You may like these posts

Comments