திகோ / தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலத்தில் 2016 இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வானது கடந்த 2016.12.01 வியாழன் அன்று பாடசாலையின் அதிபர் திரு.S.பரஞ்சோதி தலைமையில் பாடசாலை இடம் பெற்றது.இந்நிகழ்வில் இவ்வருடம் சித்தியடைந்த பி.தரணித்தா(156 புள்ளி), டி.கஜேந்(162 புள்ளி), எஸ்.ஷர்ஜிதன் (164புள்ளி) , எம். கிருஷ்னவர்ஜானி (167 புள்ளி) ,யுகநிஜா (155 புள்ளி) ஆகிய மாணவர்களும் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான என்.விவேகராஜன் மற்றும் திருமதி.பி.கருணாகரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதிஅதிபர் திருமதி. ஆர். திருச்சிவம், மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கடந்து கொண்டனர்







Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!