மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆறு மாத கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதில் நீர்குழாய் பொருத்துனர்,மரக் கைப்பணியாளர்(கட்டிடம்),மேசன் கைப்பணியாளர், வாயு மற்றும் வில் உருக்கி ஒட்டுநர் போன்ற கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இக் கற்கைநெறிகளுக்கு தரம் பத்தினைப் பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. மேலும் இக்; கற்கை நெறிகளைத் தொடரும் மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 3000 உதவுத் தொகையாக வழங்கப்படும். அத்தோடு போக்குவரத்துக்காக அரை மானியத்துடனான பருவகாலச் சீட்டும் வழங்கப்படும்.
இதற்கு க.பொ. த (சா.தா) பரீட்சையில் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், தமிழ், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். இதற்கு மாதாந்தம் ரூபா ஆயிரம் வழங்கப்படுவதுடன் போக்குவரத்துக்காக அரை மானியத்துடனான பருவகாலச் சீட்டும் வழங்கப்படும். எனவே மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரியின் வழிகாட்டல் பிரிவில் விண்ணப்பத்தினைப் பெற்று கையளிக்குமாறு அதிபர் தெரிவித்துள்ளர்.
இக் கற்கைநெறிகளுக்கு தரம் பத்தினைப் பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. மேலும் இக்; கற்கை நெறிகளைத் தொடரும் மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 3000 உதவுத் தொகையாக வழங்கப்படும். அத்தோடு போக்குவரத்துக்காக அரை மானியத்துடனான பருவகாலச் சீட்டும் வழங்கப்படும்.
இக் கற்கைநெறியினைப் பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிச்சித் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழுடன் Nஏஞமட்டம் மூன்று சான்றிழலும் வழங்கப்படும் எனமட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ரி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் உதவிக்கணிய அளவையியல், தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர், மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் பழுதுபார்த்தல் (தரம் பத்தினைப் பூர்த்தி செய்திருந்தால் போதுமானது), கணணி வன்பொருளுக்கான சான்றிதழ் போன்ற ஆறு மாத கற்கை நெறிகளுக்கும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!