Contact Form

Name

Email *

Message *

அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்துள்ள சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க விசேட நடவடிக்கை

வௌ்ளம் மற்றும் மண்சரிவால் இடம்பெயர்ந்துள்ள சாரிதிகள், சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை வாகன போக்குவரத்து திணைக்களம் தி…

Image
வௌ்ளம் மற்றும் மண்சரிவால் இடம்பெயர்ந்துள்ள சாரிதிகள், சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை வாகன போக்குவரத்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர தலைமையக அலுவலகத்தில் இதற்கான விசேட கருமபீடமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நாயகம் லலித் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய வௌ்ளம் மற்றும் மண்சரிவால் குறித்த சாரதி பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம சேவையாளரால் உறுதிப்படுத்தபடும் பட்சத்தில் அந்த சாரதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து ஆணைாயளர் நாயகம் கூறியுள்ளார்.
ஒருநாள் சேவையூடாக , மேலதிக கட்டணங்கள் இன்றி சாதாரண சேவைக்குரிய கட்டணத்தின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் நிற்காது ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட கருமபீடத்திற்கு நேரடியாக சென்று சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விசேட திட்டத்தினூடாக வாகன போக்குவரத்து அனுமதிப்பத்திரம் மற்றும் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் காணாமற்போயுள்ள வாகன இலக்க தகடுகள் என்பனவற்றையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணைாயாளர் நாயகம் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

You may like these posts

Comments