சிகரெட்டிற்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் உடனடியாக அமைச்சரவை கவனம் செலுத்துமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிகரெட்களின் விலை, தனி நபர் வருமான அதிகரிப்புடன் விகிதாசார முறையில் அதிகரிக்கப்படவில்லை என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்த கருத்திற்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
உலக மது ஒழிப்பு தின பிரதான நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதேவேளை, போதைப்பொருளுக்கு எதிரான கொடி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!