Contact Form

Name

Email *

Message *

இளைஞர்கள் ஒரு நாளில் 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுவதாக ஆய்வில் தகவல்

இளைஞர்கள் ஒரு நாளில் 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. 1980 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு…

Image
இளைஞர்கள் ஒரு நாளில் 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
1980 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு நாளில் 3 மணிநேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்டுகளில் செலவிடுவதாக சர்வதேச புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
குளோபல் வெப் இண்டெக்ஸ் எனும் இந்த புள்ளிவிபரம் தெரிவித்துள்ளபடி, 18 முதல் 32 வயதுள்ள ஒவ்வொரு இளைஞரும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் 14 நிமிடங்கள் சராசரியாக ஸ்மார்ட்போன்களில் மட்டும் செலவிடுவதாக தெரியவந்துள்ளது.
2012 ஆம் ஆண்டை விட தற்போது இது அதிகரித்திருப்பதாகவும், தொடர்ந்து இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை செலவிடுவது உயரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், ஜெர்மனியில் ஸ்மார்ட்போன்களில் மூழ்கியிருப்பவர்களுக்காகவே சாலைகளில் தரையில் டிராபிக் சிக்னல் விளக்குகளை பொருத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may like these posts

Comments