தற்போது நாட்டில் நிலவும் அதிகூடிய வெப்பநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் ஒருவித தோல் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த தோல் நோய் தொடர்பில், றுகுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுஜீவ அமரசேன விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு,
இந்த காலப்பகுதியில் நிலவிவரும் அதிகூடிய வெப்பநிலை காரணமாக குழந்தைகள் உடலில் வியர்குரு போன்று ஒருவகை தோல் நோய் பரவி வருகிறது.
குறித்த தோல் நோய்க்கு கிரீம் பயன்படுத்துவதால் எவ்வித பயனும் இல்லை.
இது இரண்டு அல்லது மூன்று நாட்களில் தானாகவே மறைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.