Contact Form

Name

Email *

Message *

கோபி அருந்துவதன் மூலம் கல்லீரலில் ஏற்படும் நோய்கள் குணமாகும் – ஆய்வில் தகவல்

அவுஸ்திரேலியாவின், மோனாஷ் பல்கலைக்கழக இரைப்பை மருத்துவர் அலெக்ஸ் ஹாட்ஜ் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கோபி குணமாக்குமா, என்ற நோக்கில் ஆய்வு நடத்தினார். ஹ…

Image
அவுஸ்திரேலியாவின், மோனாஷ் பல்கலைக்கழக இரைப்பை மருத்துவர் அலெக்ஸ் ஹாட்ஜ் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கோபி குணமாக்குமா, என்ற நோக்கில் ஆய்வு நடத்தினார்.
ஹெப்படைட்டிஸ் சி, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் மதுப்பழக்கத்தால் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றால், பாதிப்பிற்குள்ளான 1100 நோயளிகளிடம் ஒவ்வொரு நாளும் மூன்று முறை கோபி குடிக்க வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த நோயாளிகளில் முக்கியமாக ஹெப்படைட்டிஸ் சி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் கல்லீரல் சீரடைந்ததாக தெரியவந்தது.
எனினும், கோபியின் எந்த மூலக்கூறு கல்லீரலின் முன்னேற்றத்துக்கு காரணம் என்பது தெரியவரவில்லை.
ஆகவே, இந்த மூலக்கூறினைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட இருப்பதாக அலெக்ஸ் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.

You may like these posts