கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பாரிய அழிவினை சந்தித்து வந்துள்ள எமது தமிழ் சமூதாயம் எதிர்வரும் காலங்களில் சகல துறைகளிலும் போட்டியிட்டு வாழக் கூடிய நிலையில் எமது எதிர்கால சந்ததியினாரான குழந்தைகளை திட்டமிட்ட முறையில் வளப்படுத்தி அவர்களை அறிவாற்றல் மிக்கவர்களாக மாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பும் கடமையும் இன்று எமது தலைகளில் சுமத்தப்பட்டுள்ளது என திருக்கோவில் பிரதேச உதவிச் செயலாளர் எஸ்.ஜெயரூபன் தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உற்பத்தி திறன் அபிவிருத்தி மற்றும் பசுமை மேம்பாட்டு திறன் சம்மந்தமான செலலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எமது சமூகம் துரதிஷ்டவசமான உள்நாட்டு யுத்தம் காரணமாக உயிர்,உடமை,பொருளாதாரம்,கல்வி, கலை கலாசாரம் என அனைத்து விதமான துறைகளிலும் ஏனைய சமூகத்தினை விட பின் தங்கி காணப்படுகின்றது. இதனை உடனடியான ஈடுசெய்ய வேண்டும். அதற்கு எம்மிடம் உள்ள ஒரே ஒரு வளம் கல்வி. இதனை முறையாக திட்டமிட்டபடி சிறப்பாக எமது குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும். இந்த பணி ஒரு தரப்பினரை சார்ந்ததல்ல. தற்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற எமது அனைவரினதும் பணியாக அமைந்துள்ளது.
இருந்தும் முதல் நிலையில் பெறறோர்,ஆசிரியர் சமூகம் காணப்படுகின்றது. இதற்கு அடுத்த நிலையில் நாம் அனைவரும் சிறப்பாக செயற்பட வேண்டும். இதற்கு முறையான திட்டமிடல்கள் தேவைப்படுகின்றது. இதற்கான மேலதிக அறிவினை இவ்வாறான செயலமர்வுகள் ஊடாக நாம் வளர்ந்துக் கொண்டு எதிர்கால சமூகத்தினரை அறிவாற்றல் மிக்கவர்களாக சமூதாயத்துக்கு மாற்ற வேண்டும் என்றார்.