மூன்று தசாப்தங்களின் பின் தமிழர் ஒருவர் இந் நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையானது நல்லாட்சியின் நம்பகத்தன்மையை மேலும் தமிழ் மக்கள் மத்தியில் வலுவடைய வைத்துள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஐயா தெரிவு செய்யப்பட்டுள்ளமையை அடுத்து அம்பாறை மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகளில் நாளைய தினம் மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!