Contact Form

Name

Email *

Message *

33 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியில் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் அபிவிருத்திக்கு அமெரிக்க உதவி

கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட சமூகங்களின் பயன்பாட்டிற்காக எட்டுப் பாடசாலைகளை நிருமாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் ஐக…

Image


கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட சமூகங்களின் பயன்பாட்டிற்காக எட்டுப் பாடசாலைகளை நிருமாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுடன் ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டுள்ளது.


3.3 மில்லியன் டொலர்கள் அண்ணளவாக இலங்கை நாணயப்படி 450 மில்லியன் ரூபாய் நிதியுதவில் இந்தப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும். குறிப்பாக இந்தப் பாடசாலைகள் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது பொது மக்களுக்கான பாதுகாப்பிடங்களாகவும் பயன்படுத்தத் தக்கவாறு அமைக்கப்படவுள்ளது என்றும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

நல்லிணக்கத்திற்கான இலங்கையின் முயற்சிகளில் உதவக் கூடியதாக எதிர்கால வளர்ச்சிக்காக ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தால் அடையாளம் காணப்பட்ட இரண்டு பாடசாலைகளுக்கு சம்பூரில் மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்படும் ஒரு மில்லியன் உதவிக்கு மேலதிகமாக இந்த நிதியுதவி வழங்கபப்டுகின்றது.

'இலங்கை முழுவதிலும் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை நிருமாணிப்பதற்கு உதவுவதில் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது' என அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரதானி லெப்டின்ற் கேர்னல் றொபேர்ட் றொஸ் தெரிவித்துள்ளார்.

'கிழக்கு மாகாணமும் இலங்கையும் இந்த செயற்திட்டங்களை வரவேற்பதுடன் இந்த மாகாணத்தின் சமதாயங்களுக்கு மென்மேலும் எதிர்காலத் திட்டங்களை எதிர்பார்த்திருக்கின்றோம்' என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

You may like these posts

Comments