Contact Form

Name

Email *

Message *

க.பொ.த உயர்தர மாணவருக்கான கருத்தரங்குகளுக்கான தடை குறித்து ஆசிரியர் சங்கம் அதிருப்தி

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு பரீட்சைகள் ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் அதிருப்தி வ…

Image
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு பரீட்சைகள் ஆணையாளரால் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இந்த தடையால் இம்முறை பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர் தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பகுதிநேர வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை இன்று நள்ளிரவுடன் நிறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை செப்டெம்பர் எட்டாம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த நடவடிக்கை மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் செயற்பாடாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் உப்பாலி மாரசிங்கவிடம் வினவியபோது வர்த்மானி அறிவித்தல் மூலம் கடந்த காலங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த தீர்மானத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You may like these posts

Comments