Contact Form

Name

Email *

Message *

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 566,823  பேர் தகுதி பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கா…

Image
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு566,823 பேர் தகுதி பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக628,925 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 566,823பேர் தகுதிபெற் றுள்ளனரென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
அந்தவகையில் அதில் 62,102 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களிலிருந்து தபால் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
அனைத்து தெரிவத்தாட்சி அலுவலகங்களிலும் தற்காலிக தபால் நிலையங்களை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டிருப்பதாகவும் மொஹ மட் தெரிவித்தார்.
இம் முறை இரண்டு கட்டங்களாக தபால் மூல வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன. ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், அரச பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர ஆகஸ்ட் மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் தகுதி பெற்றுள்ள மற்றைய வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பாக 6151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் நாடு முழுவதும் 12021 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.
தேர்தலில் மாவட்டங்களின் ரீதியில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய் யப்படவுள்ளதுடன் 29 பேர் கட்சிகளுக்கு கிடைக்கின்ற வாக் குகளின் அடிப்படையில் தேசியபட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட வுள்ளனர். அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வுள்ளனர்.

You may like these posts

Comments