Contact Form

Name

Email *

Message *

கிழக்கில் 10,87,776 பேர் வாக்களிக்கத் தகுதி

கிழக்கு மாகாணத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் 10 இலட்சத்து 87 ஆயிரத்து 776 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே பொதுத் தேர்தல்…

Image
கிழக்கு மாகாணத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் 10 இலட்சத்து 87 ஆயிரத்து 776 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். 2014 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படியே பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்படி திகாமடுல்ல மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர், தொகுதி அடிப்படையில் அம்பாறையில் 1,61,999 பேரும் சம்மாந்துறையில் 60,357 பேரும் கல்முனையில் 71,254 பேரும் பொத்துவிலில் 152,147 பேரும் தகுதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்து 65 ஆயிரத்து 167 பேர் தொகுதி அடிப்படையில் கல்குடா 1,05,056 பேரும் மட்டக்களப்பு 1,72,499 பேரும் பட்டிருப்பு 87,612 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 852 பேர் தொகுதி ரீதியில் சேருவில 74,070 பேரும் திருகோணமலையில் 86,978 பேரும் மூதூர் 95,804 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

You may like these posts

Comments