இலங்கையின் இந்துக்களுக்கான தேசிய மாத சஞ்சிகையான இந்துக்களின் குரல் என்ற சஞ்சிகையின் கிழக்கு மாகாணத்திற்கான அறிமுகவிழா இன்று 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5மணியளவில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் இறுதித்திருவிழாவின்போது ஆலய முன்றலில் பரிபாலனசபைத்தலைவர் சு.சுரேஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்துக்களின் குரல் இணை ஆசிரியர் சிவ.சுதர்சனன் ஜீ அதனை அறிமுகம் செய்துவைக்கவிருக்கிறார். ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் வரவேற்புரை நிகழ்த்த அறிமுகவுரையை இந்துக்களின் குரல் எழுத்தாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தவிருக்கிறார்.
அங்கு அது விற்பனைசெய்யப்படவும் உள்ளதாக தலைவர் சுரேஸ் தெரிவித்தார்.