Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் விபுலானந்தா அக்கடமியினரால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பரிசளிப்பு விழா - 2014

திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த 2012/2013 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும், 2013 க.பொ.த - சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அதி உயர் பெற…

Image
திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த 2012/2013 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும், 2013 க.பொ.த - சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அதி உயர் பெறுபேறுகளைப்  பெற்ற மாணவர்களோடு திருக்கோவில் விபுலானந்தா அக்கடமியில் கற்று 5A சித்திகளுக்குமேல் பெற்ற மாணவர்களுக்குக்கும் அவர்களது சாதனையினைப் பாராட்டி நினைவுப்  பரிசு வழங்கும் நிகழ்வும் , திருக்கோவில் விபுலானந்தா அக்கடமியில் Diploma in English ஒரு வருட கற்கை நெறியினைப்  பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் வெகு விமர்சையாக அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.R . சுகிர்தராஜன் அவர்களும் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் விபுலானந்தா அக்கடமியின் ஸ்தாபகரும் மட்டக்களப்பு உயர் தொழிநுட்பக்கல்லூரியின் கல்விசார் ஒருங்கிணைப்பாளருமாகிய திரு. S .ஜெயபாலன், தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட தலைவரும் விரிவுரையாளருமாகிய திரு. S . குணபாலன், ஆலையடிவேம்பு பிரதேச கல்விப்பணிப்பாளர் திரு. V . குணாளன் ஆகியோரும், மேலும் பல சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வினை விபுலானந்தா அக்கடமியின் பணிப்பாளர் திரு. N. பிரசன்னா தலைமைதாங்கி நடாத்தினார்.

இன் நிகழ்வின் போதுA/L மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்களினால் நினைவுப்பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுகளை மேலும் சிறப்பூட்டும் விதமாக Dreambox media  குழுவின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. மாணவர்களை அவர்களது பெற்றோர்களே மாலை அணிவித்து கௌரவித்தமை இந்நிகழ்வினை மேலும் மெருகூட்டியது.

திருக்கோவில் பிரதேச மாணவர்களின் கல்விக்கு இக் கல்வி நிறுவனத்தின் சேவை தொடர்ந்து மேலும் நீடிக்க எமது வாழ்த்துக்கள்...

















You may like these posts