(உ.உதயகாந்த்)
பொருளாதார
அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால்
நடாத்தப்பட்ட 14 ஆவது நடமாடும் சேவையானது நேற்றையதினம் (24) தம்பிலுவில் – 2 இலுள்ள
பல்தேவைக் கட்டத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.
தம்பிலுவில்
– 2 கிழக்கு கிராமசேவகர் பிரிவு மக்களின் தேவைகளை அவர்களது பிரதேசத்திலேயே
உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுக்கும் வகையில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால்
தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நடமாடும் சேவையானது திருக்கோவில்
பிரதேச செயலகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின்
பிரதிநிதித்துவத்தோடு பி.ப. 4.30 மணிவரை நடைபெற்றது.
இதில் குறிப்பிட்ட
பிரதேசத்தைச் சேர்ந்த கணிசமான அளவு பொதுமக்கள் கலந்துகொண்டு தமக்கான சேவைகளைப்
பெற்றுக்கொண்டனர்.