ஜூடேயா என்ற நாட்டில் பெத்தலஹெம் என்ற சிற்றூரில் பரிசுத்த ஆவியின்மூலம்
மேரி அம்மையாரின் வயிற்றில் ஜனித்த இயேசு, பின் மாட்டுத்தொழுவத்திலே பிறந்தார்.
யோசேப்பும், மேரியும் அவருடைய பெற்றோர்களாக இருந்தார்கள். அவர்கள் நாசரேத்து
என்னும் ஊரில் வசித்து வந்தார்கள். இயேசுநாதர் தன்னுடைய வாழ்க்கையின் முதல்
முப்பது ஆண்டுகள் கலிலேயாவில் தன் தகப்பனாரின் தொழிலாகிய தச்சுவேலையை
செய்துவந்தார்.
சிறுவனாக இருந்தபோது யூத சமயக் கருத்துகளை நன்கு அறிந்திருந்தார்.
ஒரு சமயம் எருசலேம் நகரத்து தேவாலயத்தில் யூத குருக்களிடம் யூத சமய
கருத்துகளைப் பற்றி திறமையாக வாதாடி யூத குருமாரை ஆச்சரியப்படுத்தினார்.
பாவச்செயல்களிலிருந்து மனம் திரும்புதல் ஆன்மிக வாழ்க்கையில்
தூய்மையாக இருத்தல் என்பனபற்றி போதித்த "யோவான்ஸ்நானகன்"
இயேசுவை பெரிதும் கவர்ந்தார். பின்னர் இயேசு, தன்னுடைய முப்பதாவது
வயதில் யோவான்ஸ்நானகன் அவர்களிடம் "யோர்தான்" நதிக்கரையில்
ஞானஸ்தானம் பெற்றார். " இறைவனை நேசிப்பது மட்டும் போதாது
மக்களையும் நேசிக்க வேண்டும்" என்பது இயேசுவின் கருத்தாகும். மனம் வருந்தி
தன் தவற்றை ஒருவர் உணர்ந்தால் அவரை இறைவன் மன்னிப்பார் என்றும்,
அதேபோல் மனிதர்களாகிய நீங்கள் பிறரை மன்னிக்கவேண்டும் என்றும்
இயேசு போதித்தார். இவ்வாறு மூன்று ஆண்டுகள் அவர் தன்னுடைய
போதனைகளை பரப்பினார். தன்னுடைய ஆன்மிக சக்தியினால் அவர்
குருடர்களுக்கு பார்வை அளித்தார், நோயாளிகளை குணமாக்கினார்,
இறந்தவர்களை உயிர்ப்பித்தார் என்றெல்லாம் அவரின் வரலாற்றின்மூலம்
நாம் அறியலாம்.
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர் என்று அவர் போதித்தார்.
தாங்கள் மட்டும் உயர்ந்தவர்கள் என்று யூதர்கள் கருதியதை அவர் கண்டித்தார்.
இதை விரும்பாத யூதர்களும், யூத குருமார்களும் அவரை ஒழிக்க வேண்டும்
என்று எண்ணினார்கள். பரலோக ராட்சியத்தை ஏற்படுத்தவே தாம்
பிறந்திருப்பதாக இயேசுநாதர் சொன்னதை, வேறு விதமாக பொருள்படுத்தி,
ரோமப் பேரரசுக்கு எதிராக இயேசு ஒரு அரசை அமைக்க முற்படுவதாக துரோக
குற்றத்தை அரச யூதகுருமார்கள் இவர்மீது சுமத்தி இயேசுவை ரோமானிய
ஆளுநர் "பிலாத்து" என்பவரிடம் அழைத்து சென்றனர். இயேசுநாதரை நன்கு
விசாரித்த பிலாத்து அவர் நிரபராதி என்று தீர்பளித்தார்.
ஆனால் யூதர்கள் இயேசுவை கொன்றே தீரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆளுநர் பிலாத்து மனம் உடைந்தவராய் தன்னுடைய கைகளை கழுவிக்கொண்டு
"நீதிமானாகிய இவருக்கு எதிராக நீங்கள் செய்கின்ற பாவத்திற்கு நான்
பொறுப்பாளியல்ல" என்று சொல்லி இயேசுவை யூதர்களிடம் ஒப்படைத்தார்.
கடைசியில் யூதர்கள் இயேசுவின் தலையில் முள்கிரீடத்தை இரத்தம் வடியவடிய
அணிவித்து, வீதி நெடுகிலும் சிலுவையை சுமந்தபடி அழைத்துச் சென்றனர்.
அவரை சாட்டையால் அடித்தனர். அவரை மோசமாக துன்புறுத்தி மகிழ்ந்தனர்.
மக்கள் இதைப்பார்த்து கதறி அழுதனர். பின் யூதர்கள் இயேசுவை கல்வாரி
மலையில் சிலுவையில் அறைந்து கொன்றனர்.
அவர் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தன்னுடைய சீடர்களுக்கு
காட்சி கொடுத்தார். உயிர்த்தெளுந்ததிலிருந்து நாற்பது நாட்களுக்கு
பின் இயேசு வானத்தில் மறைந்துவிட்டார். அதன் பின்னர் இயேசுநாதரின்
கொள்கைகளை அவருடைய சீடர்கள் பரப்பினார்கள். கிறிஸ்துவுக்குப்பின்
இரண்டாயிரம் வருடங்களுக்குப்பின்னும் அவரது போதனைகளும்,
வசனங்களும் பல்வேறுபட்ட கிறிஸ்தவ மதப் பிரிவுகளுடாக இன்றும் பரப்பப்படுகிறது.
"பெரிய வெள்ளி", "குருத்தோலை ஞாயிறு" என்று அவருடைய இறப்பையும்,
உயிர்ப்பையும் உலகம் இந்தவேளையிலே நினைவுகூர்ந்துகொள்கிறது.
அவரை போற்றுகிறது. அவரை பிரார்த்திக்கிறது. அன்பே உருவான இயேசுபிரான்
எப்பொழுதும் எம்மோடு இருப்பாராக.......
அப்போது நமக்கு நலம் கிடைக்கும்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!