அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடிச்சாறுப் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகளை நேற்று வியாழக்கிழமை மாலையில் மீட்கப்பட்டள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். அம்பாறை விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நிலத்தில் பாதுகாப்பான முறையில் மறைத்த வைக்கப்பட்டிருந்த 250 எல்.எம்.ஜி.ரக துப்பாக்கி ரவைகளை விசேட பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!