Contact Form

Name

Email *

Message *

சுயதனிமைப்படுத்தலுக்குட்பட்ட இளம் குடும்பஸ்தர் தற்கொலை - திருக்கோவிலில் சம்பவம்

சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

Image






சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.



இச்சம்பவம் திருக்கோவில் பிரதேசத்துக்குட்பட்ட வினாயகபுரம் என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் (9) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

பழையதபாலக வீதி வினாயகபுரம் 2 ஜச் சேர்ந்த கோபாலபிள்ளை சிறிகரன்(வயது32) என்பவரே இவ்விதம் தற்கொலைசெய்துள்ளவராவார்.
13வயதுடைய பெண்பிள்ளையையும் 10வயது ஆண்பிள்ளையையும் மனைவியையும் தவிக்கவிட்டுச்சென்ற அவர் சவூதியில் வேலைசெய்தவராவார்.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி கொரொன நெருக்கடி காரணமாக இலங்கை வந்து ஊருக்கு வந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

பின்பு அதிலிருந்து விடுதலையாகி சுதந்திரமாக வாழ்ந்து வந்த வேளையில் போதையில் குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டதனால் விரக்தி காரணமாக நேற்று நள்ளிரவில் குளியலறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார் என பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவருகிறது.

You may like these posts