திகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போட்டி 2015ன் இறுதி நிகழ்வு இன்று 2014.02.16 திங்கட்கிழமை வித்தியாலய அதிபர் திரு.S.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.S.குணாளன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் வலய முகாமைத்துவத்துக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.C.நடராஜா மற்றும் திருக்கோவில்,பொத்துவில் பிரதேச கல்விப்பணிப்பாளர் திரு.V.ஜெயந்தன் மற்றும் திருக்கோவில் வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், திருக்கோவில் வலய பாடசாலை அதிபர்கள், திருக்கோவில் வலய ஆசிரிய ஆலோசகர்கள், மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொது மக்கள் ஆகியோரும் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.இன் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக மாணவ, மாணவிகளின் அணிநடை இடம்பெற்றது. அத்துடன் இவ்வருடம் 455 புள்ளிகளைப் பெற்று கம்பர் இல்லம் 1ம் இடத்தினையும், 405 புள்ளிகளைப் பெற்று வள்ளுவர் இல்லம் 2ம் இடத்தினையும், 385 புள்ளிகளைப் பெற்று இளங்கோ இல்லம் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.
ஆண்களுக்கான அணிநடையில்
1ம் இடத்தினை இளங்கோ இல்லமும்,
2ம் இடத்தினை வள்ளுவர் இல்லமும்,
3ம் இடத்தினை கம்பர் இல்லமும் பெற்றுக்கொண்டன.
பெண்களுக்கான அணிநடையில்
1ம் இடத்தினை கம்பர் இல்லமும்,
2ம் இடத்தினை இளங்கோ இல்லமும்,
3ம் இடத்தினை வள்ளுவர் இல்லமும் பெற்றுக்கொண்டன.































